தஞ்சாவூர்,- சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவில் இன்று (நவ.8) நடை சாத்தப்பட்டு கோவில் மூடப்பட்டது.
இந்தாண்டு சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணி முதல் மாலை 6.29 மணி வரை நிகழ்வதால், தஞ்சாவூர் பெரிய கோவிலின் கதவு பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி, வராஹி அம்மன், கருவூரர் சன்னதிகளில் தரிசனம் செய்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் கோவிலின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டது.