வில்லாயி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவாசக முற்றோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2022 01:11
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு வில்லாயி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காசவள நாடு நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சாவூர் அப்பர் தமிழ் மன்றம் இணைந்து வில்லாயி அம்மன் சன்னதியில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை இன்று காலை தொடங்கினர். முதலில் விநாயகர் வணக்கத்துடன் ஏழு திருமுறைகளையும் பாடினர். காலை தொடங்கிய திருவாசக முற்றோதல் தொடர்ந்து இடைவிடாமல் ஐந்து மணி நேரத்துக்கு நடைபெற்றது. முற்றோதல் நிகழ்வில் அப்பர் தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஆசிரியை புவனசுந்தர லட்சுமி, முனைவர் திருநாவுக்கரசர் மற்றும் காச வளநாடு நமச்சிவாய அருள்நெறி சபை நிர்வாகிகள் தர்மராஜ், கோவிந்தராஜ், செந்தில்குமார் உள்ளிட்டார் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது .இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.