Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி ... சபரிமலை பக்தர்களுக்கு தங்கும் வசதி : கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு சபரிமலை பக்தர்களுக்கு தங்கும் வசதி : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

10 நவ
2022
07:11

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஐப்பசி மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மஹா தீபாராதனை நடந்தது.

காலை 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர் வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் மலை மீது உள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில், கிருத்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாத கிருத்திகையை ஒட்டி, நேற்று, காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், நடைபெற்றது. மூன்று முறை மலைக்கோவிலை வலம் வந்த உற்சவர், பின், வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப் பெருமான் சன்னதியில் கிருத்திகை விழாவை ஒட்டி, சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்ளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது.


ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர் கோவில் சன்னிதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னிதி, பேருந்து நிலையம் அருகில் உள்ள நாகவல்லியம்மன் கோவிலில் உள்ள முருகப் பெருமான் சன்னிதி உள்ளிட்ட கோவில்களில் கிருத்திகை விழாவை ஒட்டி பூஜைகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar