மூலம் எதையும் உடனுக்குடன் முடிக்க விரும்பும் உங்களுக்கு இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனால் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. வருமானம் திருப்தி தரும். பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினரிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வர். முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெறுவர். மாணவர்கள் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பரிகாரம்: பெருமாளை வழிபட குடும்பம் சுபிட்சமடையும். சந்திராஷ்டமம்: டிச. 11, 12 அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 23
பூராடம் இந்த மாதம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனக்கவலை நீங்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் இருந்த பின்னடைவு அகலும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு, சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரவு திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. பணியாளர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேலதிகாரிகள் உங்கள் மீது குறை காணலாம். சகஊழியர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். குடும்பத்தில் சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி விட்டுக் கொடுப்பது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. சுபவிஷயத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வர். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் வெற்றி வாகை சூடலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும். புத்தகம், நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை. பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட மனக்குறை நீங்கும். சந்திராஷ்டமம்:டிச. 12, 13 அதிர்ஷ்ட நாள்: நவ. 23, 24
உத்திராடம் 1 தனித்தன்மையுடன் செயலாற்றுவீர்கள். இந்த மாதம் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். நட்சத்திர நாதன் சூரியன் சஞ்சாரத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரவு நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். பணி தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினருக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். கேதுவின் சஞ்சாரம் ஆன்மிக நாட்டத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு தடைபட்ட செயல்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வர். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். பரிகாரம்: வராகியை வணங்க நன்மை உண்டாகும். சந்திராஷ்டமம்: டிச. 13 அதிர்ஷ்ட நாள்: நவ. 24, 25
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »