அவிநாசி: அவிநாசியிலுள்ள லிங்கேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பில், கடந்த மாதம் திருக்கேதார நாதர் கோவிலுக்கு சென்று வந்தனர். அங்கு மகா ருத்ர யாகம் நடைபெற்றது. அதில், பூஜிக்கப்பட்ட கலசங்கள் மற்றும் கங்கா தீர்த்தம், 108 வலம்புரி சங்கில் நிரப்பப்பட்டு, யாகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. அதன்பின், லிங்கேஸ்வரர் மற்றும் கருணாம்பிகை அம்மனுக்கு மகாபிேஷகம் செய்விக்கப்பட்டது. விழாவையொட்டி, கோவில் முழுவதும் வண்ண மலர்களை கொண்டு மலர்ப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.