மதுரை : மகாதேவாஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு இன்று ஐப்பசி மாதம் 30ஆம் தேதி 16-11-2022 புதன்கிழமை காலை 9 மணிக்கு மகா தேவராய் பைரவராய், மதுரை, பழங்காநத்தம் கோவிலில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து பக்த கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நாளில் பைரவரை நினைத்து அன்னதானம் செய்வதும் அன்னதான பிரசாதத்தை வாங்கி உண்பதும் மிகப்பெரும் புண்ணியமாகும் என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். தேய்பிறை அஷ்டமி என்பது பைரவர் அவதாரம் செய்த திதியாகும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமியும் சிறப்பு வாய்ந்ததே. அதில் இந்த மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி என்பது வைக்கத் அஷ்டமி அல்லது *மகாதேவாஷ்டமி* என்று அழைக்கப்படுகின்றது. பல வருடங்களாக நமது காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மகாதேவாஷ்டமி சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வருடமும் மகாதேவாஷ்டமி என்ற கால பைரவாஷ்டமி (எ) வைக்கத் | அஷ்டமி சிறப்பாக நடைபெற்றது. பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்றனர்.