திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இக்கோயிலில் மேற்கு நோக்கி அமர்ந்த யோக நிலையில் பைரவர் காட்சி தருகிறார். இன்று காலை 12:00 மணி அளவில் மூலவர் யோகபைரவருக்கு தொடர்ந்து ரமேஷ்குருக்கள் பூஜைகள் நடத்தி பல வித திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி விபூதிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர். பெண்கள் யாகசாலையில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.