பதிவு செய்த நாள்
17
நவ
2022
04:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா பைரவருக்கு மகா தீபாராதனை நடந்தது.
அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், கலச ஸ்தாபனம், மகா பைரவர் ஆவாகனம், 64 பைரவ, பைரவி பூஜைகள், அக்னி காரியங்கள், மூல மந்திரம், மாலா மந்திரம், ஸ்ரீருத்ர ஜெபம், ஹோமம், 108 மூலிகைகளால் ஹோமம், பூர்ணாகாதி, தீபாராதனை முடிந்து, உற்சவமூர்த்தி பைரவருடன் கடம் புறப்பாடாகி கோவிலை பலம் வந்தது. ஸ்தல மூர்த்தியான சம்கார மூர்த்தி மகா பைரவருக்கு, மகா அபிஷேகம், அலங்காரம், சதுர்வேத பஞ்ச புராணம், பைரவர் ஸ்துதி பாராயணம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிபாடு செய்தனர்.