வீரநரசிம்மர் கோயில் சம்ப்ரோக்ஷணம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2022 10:11
மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் வீரநரசிம்மர் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியில் பஞ்ச நரசிம்மர் கோயில்கள் உள்ளன. 2வது தலமான மங்கைமடம் வீரநரசிம்மர் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சம்ப்ரோக்ஷனத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இன்று காலை 5ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து நரசிம்மர், தாயார், கொடிகம்பம் மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்டவைகளுக்கு பூஜைகள் நடந்தன. அப்போது வீரநரசிம்மர் மற்றும் திருமங்கை ஆழ்வார் காலை 9.40 மணியளவில் அனைத்து கோபுரகளிலும் புனிதநீர் ஊற்றபட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. பின்னர் முலவருக்கு திருமஞ்சனமும் மகாதீப ஆராதனையும் நடந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சம்ப்ரோக்ஷணத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன், பாலாஜி பட்டாச்சாரியார், ஸ்தலத்தார் நாரயணன் மற்றும் விழாகுழவினர் செய்திருந்தனர். முன்னதாக அதிகாலை கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள திருமங்கை ஆழ்வார் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயிலிருந்து பக்தர்களால் மேள, தாளம் முழங்கிட கொண்டுவரப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.