திருச்சானுார் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2022 08:11
திருப்பதி: திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் வருடாந்திர பிரம் மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆந்திர மாநிலம் திருச்சானுார் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. ஒன்பது நாள் திருவிழாவான தாயாரின் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக, முதல் நாளான காலை அர்ச்சகர்களின் வே த மந்திரங்க ள் முழங்க கொடியேற்றம் நடந்தது. தாயாரின் வாகனமான யானை கொடியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கஜபட்டம் என்று பெயர் வழங்கப்படுகிறது. கோவிலில் காலையில் அம்மனுக்கு சுப்ரபாதசேவைக்கு பின், யாகசாலையில் கஜபட்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டன. தாயார் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்திற்கும் பலி பீடத்திற்கும் பால் , தயிர், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட வற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதில் உள்ள தாயாரின் உருவத்திற்கு பட்டு வஸ்திரம், மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டது. கொடியேற்றத்தின் போது பத்மாவதி தாயார் சர்வ அலங்காரபூஷிதையாக பல்லக்கில் அருகில் எழுந்தருளி அருள்பாலித்தார்.