திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை முதல் திங்களை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. வருடம் முழுவதும் முதல் திங்களன்று சிவாலயங்களில் நடத்தப்படும் சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவனை தரிசிப்பது வழக்கம், நேற்று கார்த்திகை முதல் திங்கள் என்பதால் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் நடந்த 108 சங்காபிஷேகத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். விழாவில் கண்ணன் பட்டர்,செந்தில் பட்டர், விக்னேஷ் பட்டர், பாபு பட்டர் மந்திரங்கள் முழங்க நடத்தினர். சங்கில் இருந்து புனித நீர் எடுத்து புஷ்பவனேஷ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் செய்திருந்தனர்.