சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை: மாஸ்க் கட்டாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2022 10:11
சபரிமலை : சபரிமலையில் ஐந்து போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டது.
சபரிமலையில் மழை ஓய்ந்து நல்ல வெயில் அடிக்கும் நிலையில் சின்னம்மை பரவி வருகிறது. ஐந்து போலீசாருக்கு சின்னம்மை உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை தொடர்ந்து போலீஸ் விடுதி அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சின்னம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கியிருந்த 12 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு அவர்கள் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். நோய் மேலும் பரவாமல் இருக்க எல்லா போலீசாரும் கட்டாயம் மாஸ்க் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களும் முடிந்த அளவு மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பம்பையில் இருந்து நிலக்கல் செல்ல கேரள அரசு பஸ்களில் அதிக கூட்டம் உள்ளது. பஸ் புறப்பட்ட பின் டிக்கெட் கொடுப்பதில் உள்ள சிரமத்தை போக்க பம்பை மணல் பரப்பில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த கவுண்டர்களில் டிக்கெட் வாங்கி பின் பம்பை பெரிய பாலம் வழியாக சென்று போலீஸ் கட்டுப்பாட்டு அறை முன்பிருந்து நிலக்கல் பஸ்சில் ஏறி பயணம் செய்யலாம்.