மூன்று கருவறை: மைசூருவுக்கு கிழக்கே 38 கி.மீ., தூரத்தில் உள்ள தலம் சோமநாதபுரம் கேசவர் கோயில். இங்கு கேசவன், ஜனார்த்தனன், வேணு கோபாலனுக்கு தனித்தனி கருவறைகள் உள்ளன. 1269ல் கட்டப்ட்டது. ஹொய்சால மன்னர் 3ம் நரசிம்மரின் மந்திரி சோமநாதர் இக்கோயிலைக் கட்டி, தன் பெயரை ஊருக்கு வைத்தார். ஸ்தபதி ஜக்கன்னாச்சாரி இக்கோயிலைக் கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது. 215 அடி நீளமும் 177 அடி அகலமும் கொண்ட இக்கோயில் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். பார்வையாளர் கட்டணம் ரூ.5 .