கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர ஊற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2025 11:04
கோவை; கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அக்னிசாட்டு நடைபெற்றது. அதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவில் மண்டபத்தில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து தினமும் கோவில் கொடிமரம் முன்பு உள்ள அக்னி சட்டி கம்பத்திற்கு ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் கைகளால் குடத்தில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீர ஊற்றி வழிபட்டு வருகின்றனர். இன்றும ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.