பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது கேசட் போடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2012 02:08
பல அர்ச்சகர்கள் உள்ள கோயிலாக இருந்தால் ஒருவர் அபிஷேகம் செய்ய மற்றவர்கள் மந்திர பாராயணம் செய்யலாம். ஒரே அர்ச்சகர் உள்ள கோயில்களில் பாராயணமும் செய்து கொண்டு அபிஷேகமும் செய்யும் பொழுது அவருக்கு சிரமம். சத்தம் போதாததால் பக்தர்களுக்கு கவனக்குறைவும் ஏற்படுகிறது. எல்லோர் மனதும் ஒரு நிலைப்பட்டு அபிஷேக வழிபாடு செய்வதற்கு பாராயணம் அவசியம். இதை அர்ச்சகர் மட்டுமே செய்ய வேண்டுமென்பதில்லை. பக்தர்களும் தேவாரம், திருவாசகம் முதலியன பாராயணம் செய்யலாம். இது மிக விசேஷமானது. ஒன்று மில்லாத பட்சத்தில் கேசட் தான்!