ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயிலில் 1300 சிவனடியார்கள் உழவார பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர்.
சென்னை நமச்சிவாய உழவார பணி குழு சேர்ந்த சிவனடியார்கள் 1300 பேர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இவர்களை ராமேஸ்வரம் சேவா பாரதி தலைவர் சுடலை வரவேற்றார். பின் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சிவனடியார்கள் கைலாய வாத்தியத்துடன் ஊர்வலமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடும் பக்தர்கள் விட்டு செல்லும் கழிவு துணிகள், பிளாஸ்டிக் பைகளை சிவனடியார்கள் சேகரித்து சுத்தம் செய்தனர். மேலும் வடக்கு, தெற்கு நந்தவனத்தில் உள்ள முள் செடிகள், புதர்களை அகற்றி உழவார பணி மேற்கொண்டு சுத்தம் செய்தனர். 2ம் நாளான இன்று திருக்கோயில் உபகோவிலான ராமர் பாதம் கோயில், கோதண்ட ராமர் கோயிலில் முள் மரங்களை அகற்றி சுத்தம் செய்ய உள்ளனர்.