நண்பர்களைப் போல பழகி நம்பிக்கை துரோகம் செய்பவர்களை இறைவன் தண்டிப்பானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2012 02:08
நட்பு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாமலே நாம் பலரையும் நண்பராக ஏற்றுக் கொள்கிறோம். அதனால் தான் இத்தகைய பிரச்னைகள் உண்டாகின்றன. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்கிறது திருக்குறள். உதட்டளவில் மட்டுமல்லாமல் உள்ளத்தளவில் அன்பு காட்டுவதே நல்ல நட்பு. நம்பிக்கை துரோகத்திற்குரிய தண்டனையை காலம் என்னும் சட்டம் கொடுத்தே தீரும்.