காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில், பணாமணீஸ்வரர் கோவில் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜ பெருமான் மற்றும் மாணிக்கவாசகப் பெருமான் சிலை செய்யப்பட்டு உள்ளது. புதிதாக செய்யப்பட்டுள்ள இச்சிலைகளின் கரிக்கோலம் எனப்படும் ஊர்வலம் 25ல் நடந்தது. இச்சிலைகளின் ஸம்ப்ரோக்க்ஷணம் எனப்படும் நவ கலசாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தனலட்சுமி பூஜை, புண்யாக வாசனம், வேதிகார்ச்சனை, நாடி சந்தானம், 108 திரவியாதி ஹோமம் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.