பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அம்மன் கோயில்களில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பரமக்குடி சின்ன கடை தெருவில் அருள் பாலிக்கும் துர்க்கை அம்மன் கோயிலில் நேற்று காலை சந்தனம், பால், பன்னீர் என சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு சாற்றி, பட்டு உடுத்தி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை வெள்ளிக்கிழமையையொட்டி பாலபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் அலங்காரமாகி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் அபிஷேகத்திற்கான பால் வழங்கினர்.
*பரமக்குடி சாத்தாகி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்து மாலை தீபாராதனை காண்பிக்கப்பட்டது. * பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமை நாளில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.