Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது ... திருப்பரங்குன்றத்தில் ‌சுவாமிக்கு பட்டாபிஷேகம்: இன்று மகா தீபம் திருப்பரங்குன்றத்தில் ‌சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: இன்று கார்த்திகை மகா தீபம்
எழுத்தின் அளவு:
பழநியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: இன்று கார்த்திகை மகா தீபம்

பதிவு செய்த நாள்

06 டிச
2022
05:12

பழநி: பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் இன்று மகா தீபம், சொக்கப்பானை ஏற்றப்படும்.

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா நவ.30 சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, தீபாதரணை, தங்க சப்பரத்தில் எழுந்தருளல், சின்னகுமார சுவாமி புறப்பாடு, யாகசாலை தீபாராதனை, தங்கரத புறப்பாடு நடைபெறும் என தினமும் நடைபெற்றது. (டிச.5.,) நேற்று சாயரட்சை பூஜைக்கு பின் பரணி தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், தங்க ரத புறப்பாடு நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான இன்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 4:30 மணிக்கு விளா பூஜை நடை பெறும். பாதுகாப்பு கருதி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல குடமுழுக்கு நினைவரங்கம், வழியாக மேலே செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் பயன்படுத்த வேண்டும். பிற்பகல் 2:00 மணி அளவில் குடமுழுக்கு நினைவரங்கம், தற்காலிகமாக அடைக்கப்படும். அதன் பின் மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

மலைக்கோயிலில் மதியம் 2:00 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 4:45 மணிக்கு சின்னகுமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வந்து தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்படும். தொடர்ந்து சொக்கப்பனையும் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு இன்று மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகாதீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar