காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரனப் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2022 10:12
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் ஆந்திர மாநிலத்தில் உள்ளதால் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழகம் கர்நாடகா தெலுங்கானா உட்பட வட மாநிலங்களில் இருந்தும் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .அது மட்டுமன்றி கோயிலில் நடைபெறும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரனப் பூஜைகளில் ஈடுபட உள் நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை களில் ஈடுபட்டு வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று கார்த்திகை மாத திங்கட்கிழமை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு ராகு கேது பூஜையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஐம்பதிற் கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ( இளைஞர்கள்) கோயிலுக்கு வந்ததோடு ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையிலும் ஈடுபட்டதோடு ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.