திருப்பரங்குன்றத்தில் சுவாமிக்கு பட்டாபிஷேகம்: இன்று மகா தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2022 05:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று (டிச.6) மாலை 6:15 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் தேரோட்டம் நடக்கிறது.
ஏடு கொடுக்கும் விழா: கார்த்திகை திருவிழா எட்டாம் நாளான நேற்று காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடாகி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். நடராஜர் கையில் இருந்த ஏடுகளை சிவாச்சாரியார் பெற்று சிவகாமி அம்பாள் திருக்கரத்தில் சேர்ப்பித்தார். கோயில் ஓதுவார் தேவார பாடல்கள் பாடினார். தீபாராதனைக்கு பின்பு சுவாமிகள் சேர்த்தி சென்றனர்.
பட்டாபிஷேகம்: கார்த்திகை பட்டாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு 8:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆறு கால் பீடத்தில் எழுந்தருளினர். கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெற்ற நவரத்தின செங்கோல் சுவாமியின் பிரதிநிதியான திருவிழா நம்பியார் சிவாச்சாரியாரிடம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தங்க குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜைக்கு பின்பு சுவாமியின் தங்க கிரீடத்திற்கு அபிஷேகம் முடிந்து சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டு கரங்களில் செங்கோல், வெள்ளி சேவல், மயில் கொடிகள் சேர்ப்பிக்கப்பட்டன. தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
இன்று மகாதீபம்: காலை 11:15 மணிக்கு ரத வீதிகளில் தேரோட்டம், மாலை ஆறு மணிக்கு மேல் மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.