திருக்குறுங்குடியில் திருமங்கை ஆழ்வார் திருட்சத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2022 04:12
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் அமைந்துள்ள திருமங்கை ஆழ்வார் திருவரசில் ஆழ்வார் திருட்சத்திர விழா சிறப்பாக நடைபெற்றது. .ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்யதேசங்களில் பாண்டிநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றானது திருக்குறுங்குடி. இங்கு சுவாமி நின்ற நம்பி இருந்த நம்பி கிடந்த நம்பி என 3 திருநாமங்களில் தனித் தனி சன்னதிகளில் ஒரே கோவிலில் அருள்பாலித்து வருகின்றார். உற்ச்சவா் சுந்தர பரிபூரண நம்பி. இத் திருத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் முக்தி பெற்ற இடமாகும்.. ஆழ்வாரின் திருவரசு ஊரின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது. அங்கிருந்து பார்த்தால் மலை நம்பி திருக்கோயில் தெரியும். மலை நம்பியிடம் வேண்டி ஆழ்வார் முக்தி பெற்றதாக வரலாறு. இவ்விடத்தில் தென்னை மரம் 5 கிளைகளுடன் அமைந்திருக்கின்றது. 5 நம்பியே இங்கு இருப்பதாக ஐதீகம்.
சிறப்புகள் வாய்ந்த இந்த இடத்தில் ஆழ்வாரின் அவதார தினமான கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமான இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருக்குறுங்குடி பேரருளாளா் இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் உற்ச்சவா் சுந்தர பாிபூரண நம்பிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரபந்த பாராயணம் நடைபெற்றது. அதனைதொடா்ந்து அா்ச்சகா்கள் கோயில் மாரியாதைகளுடன் மாலை மாரியாதைகளுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க திருமங்கை ஆழ்வார் திருவரசுக்கு வந்தனா். அங்கு ஆழ்வாருக்கு மாலை மாரியாதைகள் அணிவிக்கப்பட்டு அா்ச்சனை நடைபெற்றது. ஆழ்வாரின் வாழித்திருநாமம் கூறப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து அழகிய நம்பிராயா் திருக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் கோயில் உள்வீதி புறப்பாடு நடைபெற்றது. பின்னா் மூலவருக்கும் ஆழ்வாருக்கும் ஒரு சேர கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீஇராமானுஜம் (சடாரி) மலா்மாலைகள் கொண்டுவரப்பட்டு ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது. திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயா் சுவாமிக்கும் மரியாதை நடைபெற்து. திரளான பக்தா்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனா். விழா ஏற்பாடுகளை அழகிய நம்பி ராயா் தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது.