Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை ... திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் திருவண்ணாமலையில் 2வது நாளாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
800 ஆண்டு பழமையான ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலமரம்: கடவுளாக வழிபடும் மக்கள்
எழுத்தின் அளவு:
800 ஆண்டு பழமையான ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலமரம்: கடவுளாக வழிபடும் மக்கள்

பதிவு செய்த நாள்

08 டிச
2022
02:12

ஓசூர்: ஓசூர் அருகே, பரந்து விரிந்து வளர்ந்துள்ள, 800 ஆண்டுகள் பழமையான ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலமரத்தை, அப்பகுதி மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே, தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையோரம் பிதிரெட்டி கிராமம் உள்ளது. இங்கு, 4.15 ஏக்கர் பரப்பளவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய, 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் தனியார் நிலத்தில் உள்ளது. இதில், 1,500க்கும் மேற்பட்ட விழுதுகள் உள்ளன. இந்த மரத்தின் கீழ், கரகதம்மா கோவில் உள்ளது. பல விழுதுகளுடன் பரந்து விரிந்து நாளுக்கு நாள், மரத்தின் பரப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. பல்வேறு பறவைகளுக்கு இந்த மரம் வாழ்விடமாக உள்ளது. அருகிலுள்ள தனி நபர்களின் நிலத்திற்குள் ஆலமரம் விழுது விட்டு வளர்ந்தாலும், அதை கடவுளாக பார்க்கும் அக்கிராம மக்கள், மரத்தை வெட்டுவதில்லை. மேலும், மரத்தில் காய்ந்து விழும் கிளைகளை கூட, மக்கள் எடுத்து செல்வதில்லை. மரத்தின் கீழுள்ள கரகதம்மா கோவில் திருவிழாவின்போது, குண்டம் எரிக்க இந்த மரத்தின் கிளைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுவட்டார, 14க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, ஆலமர கரகதம்மா கோவில் கிராம தேவதையாக உள்ளது.

இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த முருகேசன், 54,  கூறியதாவது: ராமச்சந்திரப்பா, சின்னபித்திகப்பா ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில்தான் ஆலமரம் உள்ளது. இந்த மரங்களின் கீழுள்ள கோவிலை, இரு நாகப்பாம்புகள் காவல் காக்கின்றன. கடந்த, 50 ஆண்டுக்கு முன், இப்பகுதியிலுள்ள வீட்டிற்கு மரத்தின் காய்ந்த கிளைகளை எடுத்துச்சென்று அடுப்பு எரித்த போது, வீடே தீப்பிடித்தது. கடந்த, 2006ல் காய்ந்த கிளைகளை சேகரித்து கொண்டு சென்ற லாரி கவிழ்ந்தது. இதனால், மக்கள் இன்றளவும் மரத்தின் கிளைகளை வீட்டிற்கு எடுத்து செல்வதில்லை. இவ்வாறு கூறினார். பிதிரெட்டியை சேர்ந்த முனிரத்தினம், 40, கூறியதாவது: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், ஆலமரத்தின் கீழுள்ள கரகதம்மா கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்படும். மரத்தை பேணி பாதுகாத்து வருகிறோம். எங்கள் ஊருக்கும், இந்த மரத்திற்கும் நிறைய பந்தம் உள்ளது. இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar