பதிவு செய்த நாள்
17
டிச
2022
08:12
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்றுடன் மஹா தீபம் நிறைவடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, கிரிவலம் சென்று சுவாமியை வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 6ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்த நிலையில், நேற்றுடன் மஹா தீபம் எரியும் நிகழ்வு நிறைவு பெற்றது. வெளியூர் பக்தர்கள் கடந்த, 11 நாட்களாக திருவண்ணாமலைக்கு வருகை தந்து, மஹா தீபத்தை தரிசித்து, கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். வழக்கமாக, சுவாமி விரைவு தரிசனத்துக்கு, 20, 50 ரூபாய் கட்டண டிக்கெட் வழங்கப்படும். தற்போது, 20 ரூபாய் டிக்கெட் நிறுத்தப்பட்டு, 50 ரூபாய் டிக்கெட் மட்டுமே வழங்கப்பட்டது. விரைவு தரிசனத்துக்கு வடக்கு கோபுரம் வழியாகவும், இலவச தரிசனத்துக்கு, ராஜகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மார்கழி மாத பிறப்பையொட்டி, நேற்று காலை, 4:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. உற்சவ மூர்த்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை, பாடல்களை பாடியவாறு, மாட வீதி வலம் வந்து வழிபட்டனர்.