சபரிமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2022 08:12
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
மண்டல காலம் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு நாட்களாக 24 மணி நேரமும் இடைவெளி இல்லாமல் பக்தர் கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதி வருகிறது. நேற்று ஒரு லட்சத்து 4ஆயுரத்து 478 பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பே பதிவு செய்திந்ருந்தனர். ஆன்லைன் முன்பதிவில் நேற்று தான் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ஒரு நாள் 90 ஆயிரம் பக்தர்கைள மட் டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கும் முன்பே முன்பதிவு செய்திருந்த எண்ணிக்கை இது. பெரியநடைப்பந்தலில் இருந்து மரக்கூட்டம் வரை நீண்ட வரிசை காணப்பட்டது. கோர்ட் உத்தரவு படி நடைப்பந்தலில் இருந்து 18ம் படி வரை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு என தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான பக்தர்கள் வருகைபுரிந்தால் பம்பையில் வைத்தே கட்டுப்படுத்தி மலை ஏறஅனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.