பெரியகுளம்: பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நாளை ஹனுமன் ஜெயந்தி.
பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில், ஹனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை மங்கள இசையுடன் துவங்கியது. விஷ்வஷேனர் பூஜை, புண்யாவாசகம், பஞ்சகவ்யம், வேதிகா அர்ச்சனை, பஞ்சமுகார்ச்சனை, வேத பாராயணம், ஆஞ்சநேயர் மூல மந்திரம் ஹோமம் பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். நாளை (டிச. 23) ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் ராஜ அலங்காரத்திலும், உற்சவர் தேங்காய் அலங்காரத்திலும், கன்னிமூலையில் 12 அடி உயரம் ஆஞ்சநேயர் உட்பட மூன்று இடங்களில் காட்சியளிக்கிறார். ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் செய்து வருகிறார்.