பதிவு செய்த நாள்
23
டிச
2022
07:12
நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லில் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில், சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு, இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து, 8 வடை மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து, தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்படும்.