லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரத்தில் கல்லுக்குழி ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2022 11:12
திருச்சி: அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாட்டை கோவில் தக்கார் சுந்தரி செயல் அலுவலர் சுதாகர்,கோவில் குருக்கள் வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.