Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சத்து எட்டு வடைமாலை ... சுயம்பு காரணப் பெருமாள் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி விழா சுயம்பு காரணப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானபுரீயில் ஹனுமன் ஜெயந்தி விழா: சீதா திருக்கல்யாணம்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஞானபுரீயில் ஹனுமன் ஜெயந்தி விழா: சீதா திருக்கல்யாணம்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 டிச
2022
11:12

ஞானபுரீ சங்கடஹர ஸ்ரீ மங்கல மாருதி தேவஸ்தானத்தில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி விழாவின் போது  மகா சுவாமிகள் முன்னிலையில் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே உள்ள திருவோணமங்கலம் ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஸ்ரீ சேத்திர சகடபுர ஸ்ரீவித்யா பீடம் ஞானபுரீ சித்திரகூட  ஷேத்திரத்தில் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு 33 அடி உயரத்திற்கு இடுப்பில் சஞ்சீவினி மூலிகைகளுடன், விஸ்வரூபமாக ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் சுவாமிக்கு வலது புறம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், இடது புறம் ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி உள்ளனர். ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி  தேவஸ்தானத்தில் மார்கழி மாதம் மூல நட்சத்திர திருநாளான இன்று 23ம் தேதி வெள்ளிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. அனுமன் ஜெயந்தி  திருநாளான இன்று விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி மஞ்சள் பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 10 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த சுவாமிகள்  முன்னிலையில் விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சீதா கல்யாண உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ஸ்ரீ ஆச்சாரிய மகா ஸ்வாமிகள் ஹனுமன் ஜெயந்தி மற்றும்  திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருளாசியும், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம், பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆகிய அருட்பிரசாதங்களையும் வழங்கினார். உஞ்சவிருத்தி பஜனை, சீதா திருக்கல்யாண உற்சவத்தை உடையாளூர் டாக்டர் ஸ்ரீ கல்யாண ராமன் பாகவதர் மற்றும் அவரது குழுவினர் செய்து வைத்தனர். முன்னதாக சீதா கல்யாண உற்சவத்திற்கு பக்தர்கள்  சீர்வரிசையினை எடுத்து வந்தனர். ஹனுமன் ஜெயந்தி மற்றும் சீதா கல்யாண உற்சவத்தை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்து திருவருளையும், குருவருளையும்  பெற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி தேவஸ்தான ஸ்ரீகாரியம் சந்திர மௌலீஸ்வரர், தர்மாதிகாரி ரமணி அண்ணா மற்றும் அறங்காவலர்கள் ஜெகன்நாதன், வெங்கட்ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar