Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல பூஜை ஏற்பாடு ... சபரிமலையில் நாளை மண்டல பூஜை: தங்க அங்கி இன்று வருகை சபரிமலையில் நாளை மண்டல பூஜை: தங்க ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி புறப்பட்டது
எழுத்தின் அளவு:
ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி புறப்பட்டது

பதிவு செய்த நாள்

24 டிச
2022
08:12

சபரிமலை:சபரிமலையில் மண்டலபூஜைக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கும் தங்க அங்கி பவனி நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.

பூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டும் உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவாக மண்டல பூஜை டிச. 27 ல் நடக்கிறது. இந்த நாளில் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்க மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் 453 பவுன் ( 3.624 கிலோ) எடையில் காணிக்கையாக வழங்கிய தங்கஅங்கி பத்தணந்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. பவனி புறப்பட்டது நேற்று அதிகாலை 5:00 மணி முதல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் யானை கொட்டிலில் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். காலை 7:00 மணிக்கு சபரிமலை உருவில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு பவனி புறப்பட்டது. நேற்றிரவு ஓமல்லுார் கோயிலிலும், இன்று இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், நாளை பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் பவனி, டிச. 26 மதியம் பம்பை வந்தடையும்.பம்பை கணபதி கோயில் அருகே பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும் அங்கி மாலை 3:00 மணிக்கு பேடகத்தில் வைக்கப்பட்டு தலைசுமடாக நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக கொண்டு வரப்படும்.


மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியில் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் 6:30 மணிக்கு சன்னிதானம் வரும் அங்கியை தந்திரியும், மேல்சாந்தியும் ஏற்று வாங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவர்.டிச. 27 மதியம் ஐயப்பனுக்கு மீண்டும் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடைபெறும். இதற்காக அனைத்து துறை அதிகாரிகள் தேவசம்போர்டுடன் பல கட்ட ஆலோசனை நடத்தி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.தங்க அங்கி பவனிக்கு துப்பாக்கி ஏந்திய 33 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பர். பவனி தங்கும் இடங்களில் அந்தந்த பகுதி டி.எஸ்.பி. தலைமையில் பாதுகாப்பு வழங்கப்படும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar