பதிவு செய்த நாள்
28
டிச
2022
10:12
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 6ம் திருநாளில் பெரிய திருமொழி தொடகத்திற்கு ஏற்க, இராமானுஜருக்கு காஞ்சி வரதராஜ ராக கருட வாகனத்தில் கீழப்படியில் காட்சி கொடுத்தது போல், இன்று சிகப்பு சிக்குத் தாடையில் வரதன் கலிங்கத்துராய் , சூரிய சந்திர வில்லைகள், ஓட்டியாண காப்பு சாற்றி, பங்குனி உத்திர பதக்கம், வைஜயந்தி பதக்கம், அடுக்கு பதக்கங்கள், அரைச் சலங்கை, மகர கர்ண பத்ரம், வைர அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு வஸ்திரம், 2 வட பெரிய முத்து சரம் சாற்றி, நெல்லிக்காய் பொட்டு மாலை, தங்கப்பூண் பவள மாலை, பின் சேவையாக - மகரி பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து அரையர்கள் அபிநயத்தோடு இசைத்த திவ்விய பிரபந்தத்தின் தீந்தமிழ் திருமொழிப் பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.