பதிவு செய்த நாள்
29
டிச
2022
09:12
ஆண்டிபட்டி: சக்கப்பட்டி நன்மை தருவார்கள் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி, மாகாளியம்மன் கோயில் மார்கழி உற்ஸவ விழா நடந்தது. கோயில் வளாகத்தில் 49 அடி உயர மாகாளியம்மன், ஸ்ரீ குரு பகவான் உட்பட 21 சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
மார்கழி உற்ஸவத்திற்கான கொடியேற்று விழா டிசம்பர் 18-ல் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது. நேற்று முன்தினம் துவங்கிய உற்ஸவ விழாவில் ஐயப்ப சுவாமிக்கு 1008 பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் கரகம் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரவில் ஐயப்பன் சுவாமி, அம்பாள் ஊர்வலம் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்ட மநாயக்கன்பட்டி மெயின்ரோடு வழியாக நடந்தது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், அக்னி சட்டி எடுத்தல், குபேர ஹோமம் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து 49 அடி உயர மாகாளியம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி, அன்னதானம், 18ம் படி விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துவன்னியன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.