பழநி: பழநி மலைக்கோயில் படிப்பாதையில் அமைந்துள்ள விநாயகர் கோயிலுக்கு பாலஸ்தாபனம் நடைபெற்றது. பழநி மலைக்கோயில் செல்லும் படிப்பாதையில் இடும்பன் கோயிலுக்கு மேலே உள்ள நிழல் மண்டபத்திற்கு அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருக்கும் மூசிகம், இடும்பன் கோயில் பகுதிக்கு கீழே உள்ள விநாயகர் கோயிலில் உள்ள நாகர்கள், ஸ்ரீபாதம் கற்சிலைகளுக்கு பாலஸ்தாபனம், யாக பூஜை உடன் நடைபெற்றது. இதை நகை சரிபார்ப்பு அதிகாரிகள் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.