பதிவு செய்த நாள்
29
டிச
2022
11:12
ஒட்டன்சத்திரம்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தினமலர் செய்தி எதிரொலியாக ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு ஒளிரும் குச்சிகள்,ஒளிரும் பட்டைகள், தண்ணீர பாட்டிலகள் வழங்கப்பட்டது.
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு இன்றி செல்வதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பழநி ஆர்.டி.ஓ., சிவக்குமார், டி.எஸ்.பி, முருகேசன், தாசில்தார் முத்துச்சாமி, மண்டல துணை தாசில்தார் ராமசாமி, பழநி தண்டாயுதபாணி கோயில் கண்காணிப்பாளர் சிவனேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில் மயில்வாகனன், வரதராஜன் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள், பட்டைகளை வழங்கினர். மாநில முருக பக்தர்கள் பழநி பேரவை தலைவர் மருதமுத்து, செயலாளர் ஜெயராஜ் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.