ஜன.01ல் ராமகிருஷ்ணர் கல்பதருவாக மாறிய தினம்: தஞ்சை ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2022 06:12
தஞ்சை: தேவலோக மரமான கல்பதரு பக்தன் கேட்கும் அனைத்தையும் வழங்கும். பகவான் ராமகிருஷ்ணரும் ஜன.,1886 ம் ஆண்டு கல்பதருவாக மாறி பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அருளினார். அந்த நாளை முன்னிட்டு, வரும் ஜன.,1 ஞாயிற்று கிழமை, தஞ்சை ராமகிருஷ்ண மடம், மாரியம்மன் கோயில் கிராம மையத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விழாவில் பகவான் ராமகிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, ேஹாமம், அன்னதானம் நடைபெறுகிறது. ராமகிருஷ்ண மடம், சிவாஜி நகர் மையத்தில் அன்று மாலை தஞ்சாவூர் சத்யசாய் சேவா சமிதி சார்பில் சிறப்பு பஜனை நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளை மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் செய்துள்ளார்.