பதிவு செய்த நாள்
30
டிச
2022
05:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ராஜகோபுரம், விமானம், கோயில் பிரகாரங்களில் புனரமைப்பு திருப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜகோபுரத்தை புனரமைக்க சாரம் கட்டும் பணி துவங்கியுள்ளது.
மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் உபயதாரர்கள் மூலம் கோயில் தரைத்தளம் சீரமைத்தல், தட்டோடு பதித்தல், மூலிகை பெயிண்டிங் செய்தல்,, விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் புனரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது கோயில் தரைத்தளத்தில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ராம்கோ நிறுவனத்தின் சார்பில் ராஜகோபுரத்தை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக ராஜகோபுரத்தில் சாரம் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் புனரமைக்கும் பணிகள் துவங்கி, ஓரிரு மாதங்களில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுரத்திற்கு ஏக வர்ணமும், கோயில் வளாகத்தில் உள்ள பிற விமானங்களுக்கு பஞ்சவர்ணமும் பூசப்பட உள்ளது. இதற்கான பணிகளை கோயில் செயல் அலுவலர் ஜவகர் தலைமையில் பட்டர்கள், அலுவலர்கள், உபயதாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.