ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா : முத்துகுறி அலங்காரத்தில் நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2022 09:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து முத்துகுறி அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி வெவ்வோறு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவின் ஒன்பதாம் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து முத்துகுறி அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்திற்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.