சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்: ஜன.13 வரை தினமும் 500 பேருக்கு வழங்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2022 06:12
தஞ்சாவூர், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், தஞ்சாவூர் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்ப் பல்கலைக் கழக வளாகம் எதிரே தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், அறுசுவை உணவுடன் கூடிய அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சிக்கு சீனிவாச சிவாச்சாரியார் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். அனைவரையும் மாவட்டச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். அன்னதான நிகழ்வை புரவலர் கலா துவக்கி வைத்தார். முகாமுக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், அன்னதான முகாம் அலுவலர்கள் கணேசன், பொன்னையன், ராஜூ குருக்கள் உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர். தஞ்சாவூர் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள், பொதுமக்களுக்கு வரும் ஜன.13ம் தேதி வரை தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சபரிமலை செல்லும் வழியில் அமுதா நதிக்கரை மற்றும் பம்பையிலும், தஞ்சாவூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வரும் ஜன.13ம் தேதி மகர ஜோதி தரிசனம் வரை தினமும் அன்னதானம் வழங்க அதற்கான மளிகை மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சுமார் 4 டன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.