கோவை : காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை, 5 :40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதற்கு முன்பாக திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள் சொர்க்கவாசல் முன்பு நின்றனர். அப்போது சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்பு மூன்று ஆழ்வார்களுக்கும் முதல் மரியாதை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.