அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 12:01
திருவண்ணாமலை : ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தது. மேலும் ஆருத்ரா உற்சவம் ஆறாம் நாளில், மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். புத்தாண்டு முன்னிட்டு, கோவில், தங்க கொடிமரம் முன் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களும், வெளிநாட்டு பக்தர்களும் கூட்டமாக காத்திருந்தனர். கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அண்ணாமலையார் பக்தர்கள் லட்டு விழாவினர் மற்றும் அப்பர் உழவாரப்பணி சிவனடியார்கள் திருக்கூட்டமும் இனைந்து 27ம் ஆண்டாக தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கினர். விழாவில், திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.