சென்னை : வடபழனி.ஆதிமூலப்பெருமாள் கோயிலில் நேற்று தனுர்மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் காலை 5 மணிக்கு தனுர்மாத பூஜை, மூலவர் தரிசனம், புஷ்பாங்கி சேவை, தீபாராதனை, பெருமாள் உத்ஸவர் நாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்) காலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரை மட்டும்) திருப்பாவை சாற்றுமறை, உத்ஸவர் மண்டகபடி புறப்பாடு, பொது ஜன தரிசனம், காலை 11.30 மணிக்கு பகல் பத்து உத்ஸவம் திருமொழி சாற்றுமறை. 12.மணிக்கு நடைசாற்றுதல். மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொது ஜன சேவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.