துவாதசி விழா: கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் வீதி வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 05:01
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் துவாதசி விழாவையொட்டி கருட வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார். தொடர்ந்து ராப்பத்து விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இக்கோயிலில் நேற்று காலை 5:15 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் வைகுண்ட நாதனாக அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு ராப்பத்து விழா துவங்கியது. இன்று காலை 11:00 மணிக்கு துவாதசி விழாவில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி வலம் வந்தார். ஜன., 11 ம் தேதியுடன் ராப்பத்து விழா நிறைவடையும்.