சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் வருகை தந்து உழவாரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வரும் நிலையில் 5ம் தேதி தேர் தரிசனமும், 6 ம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. 10 நாட்கள் |நடைபெறும் உற்சவத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவிலில் உழவாரப்பணிகளில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, மாயவரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம் சேலம் திருப்பூர் உள்ளிட்ட [பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கோவில் உள் பகுதி மற்றும் வெளி பிரகாரத்தில் உழவாரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்வில் கருடானந்தா சுவாமிகள் திருக்கோவில் சுரேஷ், ஹிந்து பவுண்டேஷன் அகில இந்திய பொறுப்பாளர் சுகன்யா விஷ்வ ஷிந்து பரிஷித் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், கோட்ட பொருப்பாளர் லட்சுமிநாராயணன், கோவில் செயலாளர் கார்த்திக் தீட்சிதர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.