அன்னூர்: தேர்த்திருவிழாவில் மன்னீஸ்வரர் தெப்ப தேரில் பவனி வந்தார். பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜன. 3ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரருக்கு மகா மண்டபத்தில், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்த மன்னீஸ்வரர் தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தெப்பத் தேரில் உலா வந்த மன்னீஸ்வரரை வணங்கி பக்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து இரவு மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.