Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை; ... அயப்பன் ஆறாட்டு மதோத்ஸவம் கொல்லங்கோட்டில் கோலாகலம் அயப்பன் ஆறாட்டு மதோத்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை ‘மஹா தீப மை’ பிரசாதம் பாக்கெட் செய்யும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை ‘மஹா தீப மை’ பிரசாதம் பாக்கெட் செய்யும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

08 ஜன
2023
08:01

திருவண்ணாமலை: மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா தீப மை’ பிரசாதம்,  பக்தர்களுக்கு வினியோகிக்க, பாக்கெட் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவில்,  2,668 அடி உயர, மலை உச்சியில் கடந்த டிச., 6ல்,   மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக, 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, ஐந்தரை அடி உயர கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள், தொடர்ந்து எரிந்த மஹா தீப கொப்பரையிலிருந்து  சேகரிக்கப்பட்ட, தீப மை உடன்,    வேம்பு இலை மற்றும் கட்டை, தர்ப்பை,  மா இலை மற்றும் மாங்குச்சி, அருகம்புல், வில்வ இலை, கரிகாலகட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் சேர்த்து அதனுடன், சுவாமி அபி ேஷக விபூதி, வாசனை பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து, ‘மஹா தீப மை’ பிரசாதம் தயாரிக்கப்பட்டது. இதை, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரசாதம், மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, 10 கிராம் கொண்ட தீப மை பிரசாதம், விபூதி மற்றும் குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து  இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்கள், பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி கோவில் நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar