பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு உள்ளன புலிக்கோடு ஸ்ரீ அயப்பன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் மார்கழி மாதம் ஆறாட்டு மகோத்ஸம் நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு உற்சவம் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்தன. தொடர்ந்து 6 மணிக்கு உஷ பூஜை, லட்சார்ச்சனை, உச்ச பூஜை ஆகியவை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு களரி கோவிலகம் ஸ்ரீ மூர்த்தி பகவதி கோவிலில் இருந்து அயப்பன் கோவிலுக்கு பஞ்சபாத்திய முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு தீபாராதனை நடந்தன. இரவு 10 மணிக்கு ஆலம்பள்ளம் விஷ்ணுபாதத்தில் உற்சவ மூர்த்திக்கு நடத்தும் ஆறாட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து செண்டை மேளம் முழங்க உற்சவர் யானைகளின் அணிவகுப்புடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தன. இன்று நடக்கும் சிறப்பு பூஜைகளும் நிகழ்ச்சிகளுக்கும் பிறகு விழா நிறைபெறுகின்றன.