பதிவு செய்த நாள்
17
ஜன
2023
03:01
உத்திராடம்: சனி பகவான் உங்களின் மூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மையும், சாதிக்கும் மனப்பான்மையும் ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.
உங்களை எதிலும் நிதானமாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள் சிரமமில்லாமல் கை வந்து சேரும். கோயில் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும். சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் ‘குற்றமற்றவர்’ என நிரூபிக்கப்பட்டு விடுபடுவீர்கள். அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும். நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நற்பலன்களும் உள்ளன. தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கு மேல் இரு மடங்கு வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வியில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விரும்பும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.
பணியாளர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்கள் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக அமையும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்பு அகலும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் சுய கவுரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்கள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனையால் பிரச்னைகளில் இருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பர்.
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு
+ சாதிக்கும் மனப்பான்மை
- எதிலும் நிதானம் தேவை
திருவோணம்: சனி பகவான் உங்களின் இரண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சனி - சந்திரன் கூட்டணியில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. தாயின் வழியில் நன்மை உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய்வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதே நேரம் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். சரியான நேரத்தில் ஆகாரம் உட்கொண்டு, ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தாலே போதும். நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நண்பர்களிடம் கோபப்படாமல் நடந்துகொண்டு அவர்களின் உறவைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் மனதில் சிலரது போக்கால் வருத்தம் ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். எப்போதோ உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் மனமுவந்து உதவும் காலகட்டம் இது. சுதந்திரமாகச் சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களைவிட்டு எதிரிகள் விலகுவர். புதிய உறவுகள் மலரும். அவர்கள் உங்கள் செயல்களுக்கு அரணாகத் திகழ்வார்கள். சிலர் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்துவர். வருமானம் பெருகும். இதனால் புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். அந்த லாபத்தை எதிர்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். ஆடம்பரச் செலவை குறைத்துக் கொள்வீர்கள். தந்தை வழியில் அனுகூலங்களைக் காண்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவர். தொழிலில் ஏற்பட்ட இடையூறு விலகும். எதிர்பாராத இடங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். உடல் உபாதை முழுமையாகத் தீரும். மருத்துவச் செலவு குறையும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். அதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பர். உடலில் இருந்த சோர்வும், மனதில் குழப்பமும் மறையும். இதனால் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள்.
வியாபாரிகள், போட்டியாளர்களுடன் போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். பண விஷயத்திலும் உஷாராக இருக்கவும்.
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்களின் தேவையை நிறைவேற்றுவது நல்லது. சமுதாயத்திற்குப் பயன்படும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
பெண்கள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். ஆடம்பரச் செலவை தவிர்த்து சேமிப்பில் கவனம் செலுத்தவும். கடும் சொற்களை உதிர்க்காமல் நிதானமாகப் பேசவும்.
மாணவர்கள் தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி பெற முடியாமல் போகும்.
பரிகாரம்: திருப்பதி வழிபாடு
+ புதிய வாகன யோகம்
- வீணான வாக்குவாதம்
அவிட்டம்: சனி பகவான் உங்கள் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடக்கலாம். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரவு கூடும். வீண் அலைச்சல், திடீர் கோபம் உண்டாகலாம். சமூக மதிப்பும், அந்தஸ்தும் உயரும். சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல்நிலை சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதே நேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதை தவிர்க்கவும். சில நேரத்தில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு உருவாகும். பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள்.
சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடினமாக உழைக்க வைக்கும் சனி பகவான், அதற்கேற்ற பெரும் பலனைத் தருவதற்கும் தயங்க மாட்டார். வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவு செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்கு செலவழிப்பீர்கள். புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். பயணங்களால் நன்மை காண்பீர்கள். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தி பெறும்.
பணியாளர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செய்வது அவசியம். பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. மற்றபடி வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் ஆதரவு தருவார்கள்.
பெண்கள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை திருப்திகரமாக நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
மாணவர்கள் உற்சாகமான மனநிலையுடன் படிப்பர். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி காண்பீர்கள்.
பரிகாரம்: சிவன் வழிபாடு
+ சகோதரர் ஒற்றுமை
- புதியவர்களிடம் கவனம்