மார்கழி மாத பூஜை நிறைவு : ஆண்டாள் தாயார், கிருஷ்ணர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2023 05:01
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே தடாகம் புதூரில் உள்ள சக்தி சித்த செல்வ விநாயகர் கோவிலில் நான்காம் ஆண்டு மார்கழி மாத பூஜை நிறைவு விழா, ஆண்டாள் தாயார், கிருஷ்ணர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
இக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் காலை, 5:00 மணிக்கு சுப்ரபாதம் மற்றும் பஜனை உடன் திருவீதி உலா, தொடர்ந்து ஆண்டாள் திருப்பாவை சாற்றுமுறை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மார்கழி மாத நிறைவு விழாவையொட்டி காலை சூரியன் பொங்கல், யூ.ஜே., குழுவினரின் ஜமாப் நிகழ்ச்சி, தொடர்ந்து தாசர்களின் சங்கு நாதம் முழங்க, மங்கள நாதஸ்வர தவில் ஓசையோடு, ஆண்டாள் தாயார், கிருஷ்ணர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மாலை தீபாராதனை, ஆலய தரிசனம், அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.