அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில், சபரிமலையை போல் படி பூஜை நடைபெற்றது. அன்னூர் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை சீசனில் இதுவரை 2,000 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை சென்றுள்ளனர். நேற்று சபரிமலையில் செய்வது போலவே 13வது ஆண்டாக, 18 படிகள் அமைக்கப்பட்டு, ஐயப்பனுக்கு பதினெட்டாம்படி பூஜை செய்யப்பட்டது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மட்டும், 120 பேர் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இரு வாரங்களுக்கு முன், அன்னூரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்ற 21 பேர் குழு மீண்டும் இன்று கோவிலுக்கு வந்தது. 21 பக்தர்களும் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.